இமதுவ பகுதியில் முச்சக்கர வண்டி - லாரி விபத்து. இரு பெண்கள் உயிரிழப்பு ( ஏ எஸ் பாத்திமா , பாத்திமா சித்ரி) 7 பேர் படுகாயம்.


நேற்று மாலை 7 மணி அளவில் இமதுவ பொலிஸ் பிரிவில் காலி - அக்குரஸ்ஸ வீதியில் அங்குழுகஹ
சந்தி அருகில் காலி நோக்கி பயணித்த இலங்கை மின்சார சபையின் லாரி மற்றும் எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 7 பேர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர் ஏ எஸ் பாத்திமா வயது 68 யக்கஸ்முல்ல - வீரகெட்டிய

மற்றவர் பாத்திமா சித்ரி 32 வயது யக்கஸ்முல்ல - வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்து ஏற்படும்போது முச்சக்கரவண்டியில் மூன்று பெண்கள் ஒரு ஆண் மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர்.