பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் , போன்கள் வழங்க வேண்டாம் - பொலிஸார் வேண்டுகோள்

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார் .

 ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் கூறுகையில் , தற்போது பாடசாலை செல்லும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் . பாடசாலை சென்ற பின்னரும் , தனியார் வகுப்புக்களுக்கு சென்ற பின்னரும் அவர்கள் செய்யும் விடயங்கள் , செல்லும் இடங்கள் தொடர்பில் பெற்றோர் - . விழிப்புடன் இருக்க வேண்டும் . ஸ்மார்ட் போன்களை பிள்ளைகள் பயன்படுத்துவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . இன்று அதிகமான பாடசாலை மாணவ , மாணவியர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் . முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர் .

 இவ்வாறான சம்பவங்களுக்கு பிள்ளைகளின் பெற்றோரே பொறுப்பு சொல்ல வேண்டும் . பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூட செல்லிடப்பேசிகள் வழியமைக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார் .