தேர்தல் முடிந்ததும் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாராம் மஹிந்த தேசப்பிரிய

ஜனா­தி­பதி தேர்தல் முடிந்­த­வுடன் பதவி வில­கப்­போ­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கை யில், ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் மற்­றொரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு நான் தலைமை தாங்­கப்­போ­வ­தில்லை என்ற முடிவை இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னரே எடுத்­துள்ளேன்.

எனது பதவி விலகல் கடி­தத்தில் கையொப்­ப­மிட்டு, அது தற்­போது மேசையில் தயா­ரா­க­வுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­தவே முனைப்­புக்­காட்­டப்­பட்­டது. அது சாத்­தி­யப்­ப­டாது போனால் பதவி விலகத் தீர்­மா­னித்­தி­ருந்தேன். ஆனால், ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த வேண்­டிய நிலை ஏற்பட்டதால், இதனை நடத்திவிட்டு பதவி விலகத் தீர்மானித்துள்ளேன்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்தத் திட்­ட­மிட்­டி­ருக்கும் நிலையில் கூட சில அர­சியல் தரப்­புகள், மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வரு­கின்­றன. இந்த விட­யத்தில் என்னால் உடன்­பட முடி­யா­தி­ருப்­ப­துடன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வதை விட பதவி வில­கு­வ­தையே விரும்­பு­கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.