நவ சிங்கள ராவய அமைப்பு கலைக்கப்படும் – மாகல்கந்தே சுதந்த தேரர்


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த
அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளமையினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடிய விரைவில் புதிய பாராளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் ஜனாதிபதியிடமும் எதிர்க்கட்சி தலைவரிடம் வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களது குழுவிலும் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment