இலங்கை அரசியலில் இன்று இடம்பெறப்போவதென்ன ? ; காபந்து அரசாங்கத்தை அமைக்கிறார் ஜனாதிபதி

ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க் ஷ­வுக்கு புதிய காபந்து அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு இட­ம­ளிக்கும் வகையில் பிர­தமர் ரணில்
விக்­கி­ர­ம­சிங்க இன்று புதன்­கி­ழமை பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக நேற்­றி­ரவு நம்­ப­க­ர­மான தக­வல்கள் தெரி­வித்­தன.


அந்த வகையில் இன்­றைய தினம் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­ற­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க அத­னை­ய­டுத்து இரா­ஜி­னாமா கடி­தத்தை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் இன்­றைய தினம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். இதன்­போது இரா­ஜி­னாமா கடி­தத்தை சமர்ப்­பிக்கும் சாத்­தியம் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இன்­றைய தினம் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ புதிய பிர­தமர் தலை­மை­யி­லான 15 அமைச்­சர்­களைக் கொண்ட ஒரு காபந்து அர­சாங்­கத்தை அமைக்­க­வுள்ளார்.

எதிர்­வரும் மார்ச் மாதம் வரை அந்த அர­சாங்கம் பத­வியில் இருக்கும். எனினும் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­ப­க்ஷவை நிய­மிப்­பாரா அல்­லது வேறு ஒரு­வரை நிய­மிப்­பாரா என்­பது குறித்து தெளிவான தக­வல்கள் கிடைக்­க­வில்லை. மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன பெரும்­பாலும் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை 15 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் இடம்­பெறும் உறுப்­பி­னர்கள் தொடர்­பாக நேற்­றி­ரவு மகிந்த தரப்­பி­னரால் விரி­வாக ஆரா­யப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சட்டம் ஒழுங்கு நிதி நீதி வெளி­வி­வ­காரம் உள்­ளிட்ட 15 அமைச்­சுக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. அவற்­றுக்கே அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

கடந்த திங்­கட்­கி­ழமை புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­தாபய ராஜ­பக்ஷ பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க பதவி விலக விரும்­பாத நிலையில் இழு­பறி நீடித்­து­வ­ரு­கின்­றது.

எனினும் பல்­வேறு தரப்­பி­னரு ம் ரணில் விக்­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்து புதிய அர­சாங்கம் அமைக்க இட­ம­ளிக்­க­வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்­து­வ­ரு­கின்­றனர். மேலும் சபா­நா­ய­கரும் பிர­த­மரும் எதிர்க்­கட்சி தலை­வரும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்­தையும் நடத்­தி­யி­ருந்­தனர்.

இந்தச் சந்­திப்பில் அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­வது தொடர்­பிலும் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆராயப் பட்­டுள்­ளது.

தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழ்­நி­லையில் மூன்று திட்­டங்­களை சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தெரி­வித்­த­துடன் அது தொடர்பில் கட்­சி­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இறுதி முடி­வினை தனக்கு அறி­விக்­கு­மாறும் அதற்­கி­ணங்க தான் முடி­வொன்­றினை எடுப்­ப­தா­கவும் அறி­வித்­துள்ளார்.

அர­சியல் அமைப்­புக்கு ஏற்­ற­வ­கையில் நான்­கரை வரு­டங்­களின் பின்னர் பாரா­ளு­மன்­றத்தை மார்ச் மாதம் கலைத்து தேர்­தலை நடத்­து­வது, மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­த­வது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அமைச்­சர்­களும் பதவி விலகி புதிய ஆட்­சிக்கு இட­ம­ளிப்­பது ஆகிய மூன்று வழி­களில் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­மு­டியும் என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடி­வினை அறி­விக்­கு­மாறும் சபா­நா­யகர் கட்சித் தலை­வர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

மேலும் இன்­றைய தினம் சபா­நா­யகர் தலை­மையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போதும் அடுத்தக்கட்டம் குறித்து ஆராயப்படவுள்ளது. இதன்போது பெரும்பாலும் காபந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்­தாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியதைடுத்து நாட்டில் புதிய அரசியல் நிலைமை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment