கடல் சிங்கம் என கருதும் ஒரு விலங்கினம் நேற்றைய தினம் வெலிகம மிதிகம பகுதியில் கரைக்கு ஒதுங்கியுள்ளது.
| November 24, 2019
கடல் சிங்கம் என்று நம்பப்படும் ஒரு கடல் உயிரினம் நேற்று 23 ஆம் திகதி பிற்பகல் வெலிகம மிதிகமபகுதியில் 87 வது மைல் இடுகையின் கரையில் ஒதுங்கி இருந்ததாக வெலிகம போலீசார் தெரிவித்தனர்.
பிற்பகல் 1:00 மணியளவில் இந்த உயிரினம் கரைக்கு வந்திருந்ததாக அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
பெரும் திரளான மக்கள் இதனை பார்ப்பதற்காக அப்பிரதேசத்தைதை நோக்கி சென்றுள்ளார்கள்.
இது தொடர்பாக
மிரிஸ்ஸவில் உள்ள காவல்துறை மற்றும் வனவிலங்கு அலுவலககத்திற்கு தெரியபடுத்தபட்டுள்ளது.
சிறிய காயங்களுடனேயே கடல் சிங்கம் என கருதும் உயிரினம் இருந்ததாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.
காயங்களுடன் இருந்த கடல் சிங்கம் என கருதும் உயிரினத்தை சிகிற்சை அளிக்க கரைக்கு கொண்டுவர கடற்படை முயற்சி செய்த போதும் கற்கள் அதிகம் காணப்படும் கடற்கரை என்றதால் குறித்த கடல் சிங்கத்தை கரைக்கு கொண்டுவருவது சிரமமாக இருந்துள்ளது.கடற்கரைக்கு கொண்டு வர முயற்சி செய்த வேளையில் அது ஆழ் கடலை நோக்கி சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர.
www.weligamanews.com