பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற 6 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்- ஜி.எல்.


அரசாங்கத்தின் கொள்கைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க
வேண்டியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 225 பேரில் தற்பொழுது 104 பேருடைய ஆதரவே தமக்கு உள்ளதாகவும், இந்த ஆதரவை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்பதை சாட்டாகக் கொண்டு, கால இழுத்தடிப்பைச் செய்யவும் தாம் விரும்புவதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மு)

0 Comments:

Post a Comment