சஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு

கோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக
பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,
உடனடி பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளார். இதற்காக அவர் விசேட யோசனையொன்றை வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

இது தொடர்பில் இன்று ஆளுங்கட்சியுடனும் சபாநாயகருடனும் ரணில் பேசவுள்ளார். இந்த யோசனைக்கு மஹிந்த தரப்பின் ஆதரவும் கிடைக்கவுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் வரை காபந்து அரசு ஒன்றை முன்னெடுக்க ஏற்பாடு நடக்கிறது.அதில் தற்காலிக பிரதமர் ஒருவரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பிரதமர் என்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரை நியமிக்கவும் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவது என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மஹிந்தவை இடைக்கால பிரதமராக நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


இன்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு வரும் கோட்டாபய , ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஏற்பார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்புக்களையும் அமைச்சுக்களையும் விட்டு விலகியுள்ள சஜித் ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு நடத்தி வருகின்றனர்.
பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ரணில் விலக வேண்டுமென இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் உட்கட்சி நெருக்கடியை சந்தித்துள்ளது.


By : சிவா ராமசாமி

0 Comments:

Post a Comment