தனது பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக சஜித் பிரேமதாச அறிவிப்பு
| November 17, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக புதிய ஜனநாயகமுன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளையடுத்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிவிப்பிலேயே இதனைக் கூறியுள்ளார்.
தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (மு)