கோட்டாவின் வெற்றி உறுதி : தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித்..!
| November 17, 2019

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள
கோட்டபய ராஜபக்ஷவுக்கு
தாம் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று அவர் விடுத்துள்ள விசேட உரையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு துணையாக இருந்த அனைவருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நன்றி தெரிவித்துள்ளார்.