சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து .. பலர் பலி. சிலர் உயிர் பிழைப்பு.சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று புறப்பட்டு சில
நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தனர்.

கசகஸ்தான் நாட்டில் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது


Bek Air flight 2100 என்ற குறிப்பிட்ட விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து பின்னர் அது தலை நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது

95 பயணிகளும் 5 விமான ஊழியர்களும் இதில் இருந்துள்ளனர்

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி ஒரு சிலர் உயிருடனும் இருந்ததாக தெரியவருகிறது அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விமானம் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் விழுந்துள்ளது.

0 Comments:

Post a Comment