குளியலறையில் வீழ்ந்த பிரேசில் ஜனாதிபதிக்கு பழைய நினைவு திரும்பியது

பிரேசில் ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோ குளியலறையில் வழுக்கி விழுந்து தற்காலிகமாக பழைய நினைவுகளை இழந்து, தற்போது மீண்டும் நினைவுகளை மீட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் வழுக்கி விழுந்து அவரது தலை, தரையில் மோதியதையடுத்து சிகிச்சைக்காக பிரேசிலியாவில் உள்ள ஆயுதப் படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவர், தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசும்போது தலை தரையில் மோதியதால் தற்காலிகமாக பழைய நினைவுகளை இழந்திருந்ததாக குறிப்பிட்டார். உதாரணமாக நேற்று நான் என்ன செய்தேன் என்பது உட்பட பழைய நினைவுகளை இழந்ததாகவும், சிகிச்சைக்குப் பின்னர் தான் படிப்படியாக தனது நினைவுகளை மீட்டெடுத்ததாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட போல்சொனாரோவுக்கு 4 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று இந்த மாத ஆரம்பத்தில், போல்சனாரோ தோல் புற்றுநோய்க்கு பரிசோதிக்கப்பட்டதாக கூறினார். அவர் கடந்த ஜனவரி மாதம் ஜனாபதிபதியாக பதவி ஏற்றதில் இருந்தே பல உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment