13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 14 பதக்கங்களுடன் இலங்கை!13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய நகரங்களில் நடைப்பெற்று வருகின்றது.

நேற்றைய தினதம் சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பமான விளையாட்டு விழாவைத் தொடர்ந்து போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது.

இன்று மாலை 6 மணிவரை நடைபெற்ற போட்டிகளின்படி இலங்கை 2 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.

முதல் தங்கம்

போட்டித் தொடரின் முதல் நாளில் நடைப்பெற்ற டைக்கொண்டோ போட்டியின் ஆண்கள் பிரிவில் ரணுக்க பிரபாத் அபாரமாக ஆடி இலங்கைக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தார்.

இதேபோட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இலங்கை தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது.

இந்தக் கலப்புப் பிரிவிலும் ரணுக்க பிரபாத் இடம்பெற்றிருந்த அதேவேளை மற்றைய வீராங்கனை இசுரி டயஸ் ஆடியிருந்தார்.

முதல் நாளில் இலங்கை சார்பாக பதக்கங்களை அள்ளிய விளையாட்டு என்றால் அது டைக்கொண்டோதான். இலங்கைக்கான முதல் தங்கத்தை வென்று கொடுத்தோடு இரண்ட தங்கப்பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 9 பதக்கங்களை அள்ளியுள்ளது.
கராட்டியில் இலங்கைக்கு 4 பதக்கங்கள்

கராட்டிப் போட்டிப் பிரிவில் இலங்கை இதுவரையில் ஒரு வெள்ளிப்பதக்கமும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் நான்கு பதக்கங்களை வென்றெடுத்தள்ளது.

இதில் காட்டா பிரிவில் போட்டியிட்ட சௌந்தரராசா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தோடு பெண்கள் பிரிவில் ஹேசானி இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றார் கராட்டிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கட்டா பிரிவில் போட்டியிட்ட இலங்கை ஆண்கள் அணி வென்றது.

அதேவேளை காட்டா பிரிவில் போட்டியிட்ட பெண்கள் அணியும் வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தது.கரப்பந்தாட்டத்தில் வெண்கலம்

இலங்கையின் தேசிய விளையாட்டாக கருதப்படும் கரப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தவறவிட்ட இலங்கை ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்திற்காக பங்களாதேஷிடன் மோதியது.

இதில் இலங்கை அணி 3-1 என்ற செட்கள் அடிப்படையில் பங்களாதேஷ‍ை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

அதேவேளை கரப்பந்தாட்ட பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று மாலை நடைபெற்றது.

இதில் இலங்கை அணியும் மாலைத்தீவுகள் மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இலங்கை மகளிர் அணி அடுத்தடுத்து மூன்று செட்களையும் வென்று இலகுவில் வெற்றியீட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

0 Comments:

Post a Comment