மீனவர்கள் வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம்

இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் பி .எஸ்.எல்.வி வகை விண்கலத்தின் பூஸ்டர் ஒன்று சிக்கிய நிலையில் குறி

த்த விண்கலத்தின் பகுதி மீனவர்களால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மீனவர்களின் வலையில் சிக்கிய விண்கலத்தின் பூஸ்டரானது விண்கலம் ஒன்றிற்கு சக்தி வழங்குவதாற்காக விண்கலத்தின் கீழ் பாகத்தில் பொருத்தப்படும் பகுதியாகும்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடியில் ஈடுபட்டருந்தனர்.

புதுவை கடல் பகுதியில் இருந்து சுமார் 10 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவர்களின் வலையில் மிகப்பெரிய இரும்பு பொருள் ஒன்று வலையில் சிக்கியது.

உடனடியாக அதனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் பொலிஸாருக்கு அது குறித்து தகவல் வழங்கினர்.

குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அதனை சோதனை செய்தபோது , செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ரொக்கெட்டின் பாகம் என தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த பகுதிக்கு புதுவை அறிவியல் மைய அதிகாரிகள் சென்று ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர்.

குறித்த விண்கலத்தின் பாகத்தில் எப்.எல். 119 மற்றும் பி.எஸ்.எம்.ஓ.- எக்ஸ்.எல். என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் 23.2.2019 என்ற திகதியும் எழுதப்பட்டு இருந்தது. அத்தோடு வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம் 13.5 மீற்றர் நீளமும், சுமார் ஒரு மீற்றர் அகலமும் கொண்டதாகவும் இருந்தது.

இதை ஆய்வு செய்த அறிவியல் மைய அதிகாரிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் விண்கலத்தின் பூஸ்டர் என தெரிவித்தனர்.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில்,

ரொக்கெட் விண்ணில் ஏவப்படும் போது, அதை மேலே உந்தி தள்ளுவதற்காக 6 பூஸ்டர்கள் ரொக்கெட்டின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டு இருக்கும்.

அவை ஒவ்வொன்றாக எரிந்து சக்தியை வெளிப் படுத்தி ரொக்கெட்டை மேலே கொண்டு செல்வதற்கு உந்து சக்தியாக இந்த பூஸ்டர்கள் பயன்படுத்ப்டுகின்றது.

ஒவ்வொரு பூஸ்டரும் எரிந்து முடிந்ததும் அதன் பாகங்கள் கீழே விழும். அவை கடலில் விழும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.

அதில் முதல் கட்டமாக எரிந்து கீழே விழுந்த பூஸ்டர் தான் இங்கு கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

அத்தோடு ரொக்கெட் புறப்பட்ட 49 ஆவது வினாடியில் அது எரிந்து முடிந்து கீழே விழுந்து விடும்.

அந் நேரத்தில் எரிந்து விழும் பூஸ்டரை நாங்கள் கணித்து இருந்தோம். எனவே, அந்த இடத்தில் கப்பல்கள், மீனவர்கள் படகுகள் வந்து விடாமல் பார்த்துக்கொள்ளும்படி கடற்படையினருக்கு தகவல் தெரிவித்து இருந்தோம்.

பொதுவாக இந்த சாதனம் எரிந்து முடிந்து கீழே விழுந்ததும் கடலில் மூழ்கி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஆனால், இது கடலில் விழும்போது உடைந்து சேதம் அடைந்து இருக்கிறது இதனால் தான் கடலில் மூழ்காமல் மிதந்தபடி இருந்து இருக்கிறது.

எனவே இது மீனவர்கள் வலையில் சிக்கி உள்ளது. இந்த பாகத்தால் இனி எந்த பயனும் இல்லை. இது, இரும்பு கடைகளுக்கு மறு சுழற்சிக்குதான் வழங் கப்படும்.

ஆனாலும் இதன் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் திட எரிபொருள் நிரப்பப்பட்ட வளையம் பொருத்தப்பட்டு இருக்கும். 1½ மீற்றறர் வரை அகலம் கொண்ட இந்த வளையம் வெடிக்கும் திறன் கொண்டது. எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் வெடித்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment