வெலிகம கல்பொக்க மத்ரசதுல் பாரி அரபுக்கல்லூரியின் 135 ஆவது வருட பூர்த்தி விழா



இலங்கையில் முதன்முதலாக ஸ்தாபிக்கப்பட்ட வெலிகம கல்பொக்க மத்ரசதுல் பாரி அரபுக்கல்லூரியின் 135 ஆவது ஆண்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி காலை 8 மணி முதல் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .

கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் எம் எச் எம்  முக்ரிம் அவர்களின் பங்கேற்புடன் கல்லூரியின் அதிபர் ஏ ஆர் அப்துர் ரஹ்மான் மழாஹிரி தலைமையில் விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன

இதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்ள உள்ளார்கள்.
 சிறப்பு அதிதிகளாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும , இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெலிகம நகர சபை உபதலைவர் மின்ஹாஜ் மற்றும் முன்னாள் நகர சபை தலைவர் மொஹமட் ஹுசைன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்

 விசேட பேச்சாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவர் ஜாமியா நளீமியா கலா பீடத்தின் பணிப்பாளருமான அகார் முஹம்மத், பாணந்துறை அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ் ஷெய்க்அப்துல் ஹாலிக் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 விசேட கௌரவ அதிதிகளாக பாரி அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் விரிவுரையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரபுக் அதிபர்கள் விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 இவ்விழாவில் பட்டம் பெறும் 165 மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர் மிஸ்காத் துல் பாரி என்னும் மலரும் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

www.weligamanews.com




0 Comments:

Post a Comment