ராஜித சேனாரட்ன எனக்கு 2 இலட்சம், வாக்குகளை பெற்றுத்தந்தார் - ஜனாதிபதி


முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தமக்கு இரண்டு இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொடுத்தார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


வெள்ளை வான் தொடர்பில் இரண்டு பேரைப் பயன்படுத்தி அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரட்ன செய்த ஊடகவியலாளர் சந்திப்பினால் இரண்டு இலட்சம் வாக்குகள் எனக்கு கிடைக்கப் பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் செய்தி ஆசிரியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,


ராஜித சேனாரட்ன என்ற அரசியல்வாதியாவார். அரசியலில் ஒர் பகுதி பொய் கூறுதலாகும். நான் இந்த கலாச்சாரத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்புகின்றேன். தற்பொழுது அரசியல்வாதிகளை பொய்களை மக்கள் விரும்புவதில்லை.


அவ்வாறான செயற்பாடுகளினால் இரண்டு இலட்சம் வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இன்னும் அதிகமாக செய்திருந்தால் இரண்டு மில்லியன் வாக்குகளை பெற்றுக் கொண்டிருக்க முடியும் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment