கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் பலி, 3 பேர் காயம்!


அம்பலங்கொடை - ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரவத்த பகுதியில் இன்று பிற்பகல் முச்சக்கர வண்டியுடன் பஸ் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஹிக்கடுவையிலிருந்து வந்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதுண்டுள்ளது.

சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட ஆறுபேர் பயணித்துள்ளனர். இதன்போது படுகாயமடைந்த நபர்கள் பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மூவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் மூன்று பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலங்கொடை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments:

Post a Comment