O/L பரீட்சை இன்று ஆரம்பம், 717008 பரீட்சார்த்திகள் தோற்றம்
| December 02, 2019
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (02) திங்கட்கிழமை தேசிய ரீதியில் ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சைக்கு பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் 433,050 பேரும் தனியார் விண்ணப்பதாரிகள் 283,958 பேரும் என மொத்தமாக 71 7008 பேர் நாடெங்கிலும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இன்று ஆரம்பமாகும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,987 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளது. இப்பரீட்சைக்கான இணைப்பு நிலையங்களாக 541 நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தமக்கு அண்மையிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.