தொலைபேசிக் கட்டணம் குறையாவிட்டால் முறையிடலாம்
| December 12, 2019

அரசாங்கத்தினால் தொலைபேசிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தத்தமது தொலைபேசி கட்டண பட்டியலில் குறைக்கப்பட்டுள்ளதா எனக் கவனிக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி பாவனையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறு வரி நிவாரணம் முறையாக குறைக்கப்படாது இருந்தால் அது தொடர்பில் தெரிவிக்குமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுவான தொலைபேசிக் கட்டணத்துக்கு 37.7 சதவீத வரி அறவிடப்பட்டது. இத் தொகை தற்போது 22.6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபன்கொட தெரிவித்தார்.