இலங்கையர்களுக்கு அரிய சூரிய கிரகணத்தை காணும் வாய்ப்பு, வெற்றுக் கண்களினால் பார்க்காதீர்கள்


10 ஆண்டுகளின் பின்னர் ஓர் அரிய சூரிய கிரகணத்தை காணும் வாய்ப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையர்களுக்கு கிட்டவுள்ளதாக ஆர்த்தர் சி. க்ளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வட பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும் அந்த மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.


மன்னாருக்கு மேல்திசையில் உள்ள பகுதிகளில் இந்த நிலைமையை அவதானிக்க முடியும்.


இதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, திருகோணமலை முதலான மாவட்டங்களுக்கு இந்த சூரிய கிரகம் முழமையாக தென்படக்கூடும் என ஆர்த்தர் சி. க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.


இதேநேரம், தென் பகுதியில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே தென்படும்.


குறிப்பாக, வவுனியாவுக்கு கீழ்திசையில் கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் காலி முதலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலும் தென்படும் என அவர் குறிப்பிடடுள்ளார்.


எதிர்வரும் 26 ஆம் திகதி காலை வேளையில் இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.


முழுமையான சூரிய கிரகணம் காலை 8.09க்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 அளவில் நிறைவடையும்.


இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என ஆர்த்தர் சி. க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.
விசேட கண்ணாடியோ அல்லது பாதுகாப்பு உபகரணத்தையோ பயன்படுத்துவது சிறந்ததாகும்.


விசேடமான கண்ணாடி இல்லாவிட்டால், இரும்பு பொருத்து வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடியை பயன்படுத்த முடியம்.


அந்தக் கண்ணாடியிலும், 12 மற்றும் 14 ஆம் இலக்க கண்ணாடிகளை மாத்திரமே பயன்படுத்த முடியும்.


அந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆர்த்தர் சி. க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment