வவுனியாவில் விபத்து - ஐந்து ராணுவ பணியாளர்களுக்கு காயம்வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ராணுவ பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக வவுனியா காவல்துறை தெரிவித்துள்ளது.

ராணுவத்தினருக்கு சொந்தமான வேன் ஒன்றும் கப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்ப்டுள்ளது.


இந்த விபத்தில் வேனில் பயணித்த ராணுவ பணியாளர்கள் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment