காட்டு யானைகளை கண்காணிக்க ட்ரோன் கெமராக்கள் கொள்வனவு


மாத்தளை மாவட்டத்தில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துவரும் காட்டுயானைகளை ட்ரோன் கெமராக்களின் மூலம் கண்காணித்து மீண்டும் தூரப் பிரதேச காடுகளுக்கு துரத்தியடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத் தலைவருமான லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இம்மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான தம்புள்ள, நாவுள, இரஜமன, கலேவெல, வில்கமுவ ஆகிய பிரதேசங்களில் இரவு வேளைகளில் காட்டுயானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை அழித்துவருவதோடு மக்களையும் தாக்கிவருகின்றன. இச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் பகல் வேளையில் காடுகளில் மறைந்து வாழ்கின்றன. இவற்றை எளிதில் இனங்காண்பதற்கு ட்ரோன் கெமராக்களை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.யானைகளின் மறைவிடங்கள் கண்டுபிடித்து அங்கிருந்து யானைகளைத் தூரப்பிரதேசக் காடுகளுக்குத் துரத்தியடிப்பதற்கு இதன் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக இரண்டு ட்ரோன் கெமராக்களைக் கொள்வனவு செய்ய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதிக்கீடு செய்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

(மாத்தளை சுழற்சிநிருபர்)

0 Comments:

Post a Comment