ஜனாதிபதியை கொலை செய்ய சதி? நால்வர் பிணையில் விடுதலைஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்பத்தினரை கொலை செய்வதற்கு, பாதிப்பினை ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் அதில் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சீதுவ, ஜயவர்தனபுர அமந்தோலுவ, பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை, கிளிநொச்சி அக்கராயன்குளம், விசுவமடு, மஸ்கெலியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவவாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர், பிரதேசத்தில் இடம்பெற்ற சிறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏனைய நால்வர் எந்தவித குற்றச்செயல்களிலும், பயங்கரவாத நடவடிக்கைகளிலும் தொடர்பு கொண்டவர்கள் அல்ல என்ற விடயம் விசாரணைகளில் தெளிவான பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் மதுபானம் அருந்திவிட்டு வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அருகிலிருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Comments:

Post a Comment