தர்பாரின் சும்மா கிழி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை (07) இடம்பெற்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ரஜினிகாந்தின் 167ஆவது திரைப்படமாக உருவாகும் இதை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, அனிருந்த இசையமைத்துள்ளார்.

பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவுள்ள தர்பார் படத்தில் வில்லனாக பொலிவூட் நடிகர் பிரதீக் பாபர் நடித்துள்ளார்.தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும் சும்மா கிழி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (07) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த அரங்கை கொடுத்தற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் வரும் டிசம்பர் 12ம் தேதி எனது பிறந்த நாளை ரசிகர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது எனவும் இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு நிகரான ஞானம் படைத்தவர்கள் யாரும் இல்லை என ரஜினிகாந்த் கூறினார்.

எல்லாவற்றிலும் எதிர்மறை கருத்துகள் அதிகம் பரவுகிறது எனவே அனைவரும் அன்பை பரப்புங்கள் என கேட்டுக்கொண்டார்.

0 Comments:

Post a Comment