வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு!
Posted by tahaval on December 03, 2019
வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
நிதியமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
வற் வரி குறைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய வரித்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment