சிறுவர் தொழிலாளிகள் குறித்து விசேட கவனம்
நாட்டில் சிறுவர் தொழிலாளிகள் பிரச்சினை குறித்த பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளப்பக்கத்தில் நேற்றைய தினம் வெளியிட்ட பதிவிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் தாம் இது குறித்து பேசியதாக, நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சிறுவர் தொழிலாளிகள் பிரச்சினை குறித்து தாம் உடனடியாக கவனம் செலுத்துவதாக, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தமக்கு உறுதியளித்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர் தொழிலாளிகள் பிரச்சினையானது தீவிரமான சமூகப் பிரச்சினை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, அது தொடர்பில் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment