வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது.
| December 18, 2019

வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, கார்கள், ஜீப்கள் மற்றும் விளையாட்டுப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் ஆகியவற்றுக்கான விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன.
குறித்த விலை அதிகரிப்பானது, 75 ஆயிரம் ரூபாவிலிருந்து 1 மில்லியன் ரூபா என்ற வரையறைக்குள் இருக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆடம்பர வரி காரணமாகவே இந்த வாகன விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக, அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த புதிய வரியானது கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ், 3.5 மில்லியன் ரூபாய் விற்பனை விலைக்கு அதிகமான பெறுமதியுடைய அனைத்து வாகனங்கள் மீதும் இந்த வரி அறவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.