அரைச் சொகுசு பஸ்களை ரத்து செய்ய முஸ்தீபு
Posted by tahaval on December 09, 2019
அரைச் சொகுசு பஸ் சேவையை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அரைச் சொகுசு பஸ்கள் பயணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கட்டணங்களுக்கு ஏற்ப, போதிய சேவையை வழங்காமை உட்பட பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து இந்த தீர்மானத்துக்கு வரவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 Comments:
Post a Comment