உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, மட்டக்களப்பு, கட்டுவாப்பிட்டி மற்றும் சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சாட்சிப் பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் 40 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக நடைபெற்று வருவதாகவும் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ. ஹேரத் தெரிவித்துள்ளார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இரண்டு பொலிஸ் உயரதிகாரிகளிடம் ஏற்கனவே சாட்சியங்கள் பதியப்பட்டதாக அவர் கூறினார்.இன்று வியாழக்கிழமை இந்த தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 47 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(ஸ)

0 Comments:

Post a Comment