முன்னாள் அமைச்சர் பாட்டலி நீதிமன்றில் முன்னிலை


கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (18) இரவு அவரது வீட்டில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

0 Comments:

Post a Comment