மாத்தறை கோடகமவிலிருந்து ஹம்பாந்தோட்ட மற்றும் மத்தல வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 1 மற்றும் 2 ஆம் கட்டம் 23 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை கோடகமவிலிருந்து அபரெக்கா, பெலியத்த கசகலா மற்றும் அங்குனகோலபலேசா
 வரை நுழைவாயில்கள் பொதுமக்களுக்கு திறது வைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் கடந்த நவம்பரில் திறந்துவைக்கப்பட்ட  பரவாகம்புகா, சூரியவேவா, மடத்தள மற்றும் மாகம்புரா போன்ற நகரங்களுடன் இணைக்கப்படும்.

 திக்வெல்ல, பெலியத்த, தங்கல்ல, அம்பலாண்டோட்டா, எம்பிலிப்பிட்டிய, தனமல்வில்லா, ஹம்பாந்தோட்ட, திஸ்ஸமஹராம.
நகரங்களின் உள்ளவர்களுக்கு இதன் மூலம் அதிவேக பாதையை பயன்படுத்த சந்தர்பம் அமையும்.
 அதிவேக நெடுஞ்சாலை ஓரமாக பல முக்கிய சுற்றுச்சூழல் மண்டலங்களில் காணப்பட்டாலும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாதவாறு பல செயற்திட்டங்களுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

 வனப்பகுதி வழியாக சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் வன விலங்குகளை மாற்ற பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது0 Comments:

Post a Comment