கல்பொக்கையில் வடிகால் புனர் நிர்மாணப்பணி ஊழலினாலும், அரசியல் பின்புலத்தினாலும் இடைநிறுத்தம்.


வெலிகமை கல்பொக்கை நகர சபைக்குட்பட்ட I.L.Mohamed  Lane மாவத்தையில் வடிகால் அமைப்பதற்காக சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய நகரசபை தலைவர் அல்ஹாஜ் ஹுசேன் ஹாஜியார் முஹம்மத் அவர்களினால் வடிகால் அமைப்பு காக சிலிண்டர் குழாய் வடிகாண் நிர்மாணிக்கப்பட்டு இருந்ததை நாம் மீள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். அதன் பின்னரான தொடர்ச்சியற்ற  வடிகால் சுத்தம் செய்யாமையினாலும், முறைப்படி ஒழுங்காக சிலிண்டர் குழாய் வடிகாலினை சுத்தம் செய்ய இயலாமையினாலும் சிறிய குழாய் வடிவ சிலிண்டர் உருளை வடிகானினால் போதுமான அளவு மழைநீர் மற்றும் கழிவு நீரினை ஊடுகடத்த முடியாமையினால் மீண்டும் பல வருடமாக மழைநீரினால் தொடர்ச்சியாக வெள்ளம் ஏற்பட்டு வந்தன.

  இதனடிப்படையில் பல வருடங்களாக ஒரு சிறந்த வடிகால் அமைப்பு ஒன்றை பெறுவதற்காக அவதியுற்ற இப்பிரதேச மக்கள் பல தடவை இதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அது பயனளிக்கவில்லை, அரசியல்வாதிகளினால் கண்டுகொள்ளப்படவில்லை. பல வருடங்களாக வீடு புகுந்து விளையாடும் மழை நீருக்கு ஒரு சிறந்ததொரு வடிகால் அமைப்பினை பெற உச்சகட்ட முயற்சியாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் சென்ற வருடம் இறுதிப்பகுதியில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடனடியாக  இந்த பிரச்சினையை வெலிகமை நகரசபை தலைவர் மற்றும் உபதலைவர் கவனத்துக்கு கொண்டு சென்று,  உரிய நடவடிக்கை எடுத்து சிறந்த ஒரு வடிகால் அமைப்பை அமைத்து தருமாறு  கேட்டுக்கொண்டார்கள். அதற்கிணங்க பல சிரமங்களுக்கு மத்தியில் பல வருடங்களாக கோரப்பட்டு இருந்தும், யாரும் கண்டுகொள்ளாத இப்பிரச்சினைக்கான தீர்வுக்காக சென்ற மாதம் அதற்கான ஆரம்ப வேலை ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

  9.5 இலட்சம் ரூபா பெறுமதியான 60 மீட்டர் நீளம் கொண்ட வடிகாலமைப்பு துவங்கப்பட்டு ஒரு சில நாட்களில் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட முறையில் வடிகாலமைப்பு அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் வடிகால் கட்டமைப்பு கட்டுமான பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

  என்றாலும் பல வருடங்களுக்குப் பின்னர் துவங்கப்பட்ட புனர் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டதால் பாதி அளவில் கட்டப்பட்டு கவனிப்பாரின்றி இருக்கும் வாடிகானில் சிறுவர் முதல் பெரியோர் வரை தாய்மார்கள் உட்பட பலர் விழுந்தும் காயப்பட்டும், பல பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் பிரதேச மக்கள் முகம் கொடுத்தனர். முறையான பாதை இன்றியும் அவசர தேவைக்காக வைத்திய சாலைக்கு செல்ல முடியாத நிலையிலும் எந்த வாகனங்களுக்கும் வரமுடியாத நிலையில் பாதை தோண்டப்பட்டு இருப்பதாலும் அன்றாட குப்பைகளை கொண்டு செல்லமுடியாமல் குப்பைகள் பாதை ஓரங்களில் குவிந்து இருப்பதாலும் இன்னும் பல சுகாதார மற்றும் சமூக பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன.

இன்னும் இப் அபிவிருத்தித் திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பின்னால் அரசியல் இருப்பதனாலும் இதை தடுத்து நிறுத்தியோர் மற்றும் முறைப்படி வடிகால் அமைப்பினை உருவாக்க தவறியோர் இதற்கான முழுப் பொறுப்புடையவர்கள் என்பதையும் இதனை தடுத்து நிறுத்தியவர் மற்றும் சமூகத்துக்கு இடைஞ்சல் கொடுத்தவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ள வேண்டுமெனவும் இப்பிரதேச மக்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்www.weligamanews.com

0 Comments:

Post a Comment