வெலிகம அறபா பாடசாலைக்கு முதன் முறையாக மின்னொளி கரப்பந்தாட்டத் திடலுக்கு (volley ball court Day- night) அடிக்கல் நடும் நிகழ்வு
Posted by tahaval on February 26, 2020
வெலிகம நகர சபை முன்னாள் தலைவரும் மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுன முஸ்லிம் தலைவருமான ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு, வரலாற்றில் முதன் முறையாக மின்னொளி கரப்பந்தாட்டத்
திடல் (volley ball court Day- night)
ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை 29.02.2020 மாலை 5.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம்பெறும்.
நவீன தொழில் நுட்பத்துடனும் மின்னொளியுடனும் கூடிய இக் கரப்பந்தாட்ட திடலை முற்றாக நிர்மாணிக்க அரசாங்கம் 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
135 வருட கால பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக volley ball court ஒன்று கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment