மாத்தளை மாவட்டத்தில் பாபுல், மாவா பாவனையில் ஈடுபட்டுள்ள 25 வயதிற் குட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாய்ப்புற்று நோயால் பாதிப்பு.மாத்தளை மாவட்டத்தில் பாபுல், மாவா பாவனையில் ஈடுபட்டுள்ள 25 வயதிற்
குட்பட்ட ஆயிரத்துக்கும்
மேற்பட்ட இளைஞர்கள் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக
உக்குவள - பேலிஅம்ப அரச வைத்தியசாலை பல் வைத்திய நிபுணர் கோவித சந்திர சேகர தெரிவிக்கின்றார்.

உக்குவளை போவத்த அரச பாடசாலையில் மாணவர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.


தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பாடசாலை மாணவர் களும், பாடசாலைக் கல் வியை விட்டு வெளியே றியுள்ள இளைஞர்களும் மாவா, பாபுல் போன்ற போதைப்பொருள் பாவனை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு மாத்திரமல்லாமல் ஒவ் வொரு பெற்றோரும் கவ லைப்படக்கூடிய விடய மாகும். இந்நிலையிலிருந்து தங்களது பாடசாலை மாணவர்களையும், இளை ஞர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது பெற் றோர்களினதும் பொறுப்பதிகாரிகளினதும் முக்கிய கடமை யாகும்.


மாத்தளை மாவட்டத்தில் வாய்ப்புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். இவர்கள் ஒவ் வொருவரும் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

பல் வைத்திய பரிசோதனைகளுக்கு வரும் போது இவர்களை இனங்காண முடிகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment