மாத்தறையில் 35 பேர் தலைமறைைவு வெளிநாடுகளில் இருந்து மாத்தறைக்கு சென்ற 277 பேரில் 35 பேர் தலைமறைவாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


மாத்தறை மாவட்ட சுகாதார சேவை இயக்குநர் வைத்தியர் உபாலி கருணாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை இதன் காரணமாக மக்கள் பதட்டமடைய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த சேர்ந்த வேளை நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டவர்கள்,தனிமைப்படுத்தலிற்கு உட்பட்டவர்கள்,இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் அனைவரையும் தேடிக்கண்டுபிடிக்குமாறு உரிய அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாடுகளில் இருந்து வந்த பின்னர் வீடுகளில் இருந்து காணாமல்போன 35 பேரை கண்டுபிடிப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையின் ஹோட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு காவல்துறையினர் இணங்கியுள்ளனர்.

வைரஸ் உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களிற்கு சிகிச்சை அளிப்பதற்கும் பொதுமக்களிற்கு தகவல்களை வழங்குவதற்கும் அதிகாரிகள் விசேட பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

0 Comments:

Post a Comment