2025-ல் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு
| April 19, 2020

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து கணித கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டனர். அதன் முடிவுகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
சமூக இடைவெளி விடுவதை உடனடியாக தளர்த்தினால், அது புதிய கொரோனா நோயாளிகள் பெருமளவில் உருவாக வழிவகுக்கும்.
கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய சிகிச்சை முறைகள் எதுவும் இல்லாத நிலையில், 2022-ம் ஆண்டு வரை சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்.
சமூக இடைவெளியை இலையுதிர் காலத்தின்போது தளர்த்தினால், அது குளிர்காலத்தில் ‘புளு’ காய்ச்சல் சீசனுடன் இணைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
2025ம் ஆண்டு வாக்கில் கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற்று தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.Email Facebook6 Twitter Pinterest0 WhatsApp Viber