சீனாவின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவ


முதன்முறையாக சீனாவின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த வருடத்தின் முதற் காலாண்டிலேயே அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வர்த்தக நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியிலான பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள சீனாவின் பொருளாதாரம் 6.8 வீதமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (17) வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின் அடிப்படையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனவரி தொடக்கம் மார்ச் மாதம் வரையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள், நிரந்தர வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சிறு நிறுவனங்கள் சரிவு நிலையைக் காட்டுவதோடு, வேலை இழப்புகளிலும் இதன் பிரதிபலிப்பை காட்டும் என்று அந்நாட்டு பொருளாதார புலனாய்வு பிரிவைச் (Economist Intelligence Unit) சேர்ந்த யூ சூ (Yue Su) தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் முதற் காலாண்டில் சீனா ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டதோடு, கடந்த வருட முதற் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 6.4 வீதமாகக் காணப்பட்டது. இது அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment