இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள், கால்குலேட்டர் பயன்படுத்த வழங்கப்பட்டுள்ள அனுமதியினை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்

இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் Non Programmable Calculators பயன்படுத்த வழங்கப்பட்டுள்ள 
அனுமதியினை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். கணித்தல் செயன்முறைகள் அதிகமுள்ள பாடங்களான Accounting, Engineering Technology, Bio systems Technology, மற்றும் Science பாடங்களுக்கு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் Non Programmable Calculators பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் February மாதம் நடைபெற்ற இலங்கை கணக்காளர் சேவை பரீட்சைக்கும் இவ் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அரசினால் வழங்கப்பட்டுள்ள இவ் அனுமதியானது நவீன உலகில் மிகவும் பாராட்டத்தக்க பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு முன்னோக்கிய சிந்தனையாகவே பார்க்கப்படுகின்றது. என்றாலும் இவ்வருடம் அதாவது 2020 August மாதம் உயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கு இவ் அனுமதியானது பல்வேறு சவால்களையும் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இப்போதிருந்தே அதற்கான தயார்படுத்தல்களை செய்வதன் மூலம் அச்சவால்களையும் சாதகமானவையாக மாற்றிக் கொள்ள முடியும். எந்தவொரு மாணவராலும் முன்கூட்டியே பழக்கப்படுத்திக் கொள்ளாது நேரடியாக பரீட்சை மண்டபத்தில் மாத்திரமே கணிப்பொறிகளை பயன்படுத்த முனைவது முடியாத காரியமாகும். இதுவரை காலமும் கைகளாலேயே கணித்தல் செயற்பாடுகளை செய்து பழக்கப்பட்டுள்ள மாணவர்கள் நேரடியாக பரீட்சைக்கே கணிப்பொறிகளை கொண்டு சென்று பயன்படுத்த எத்தனிக்கின்ற போது நிச்சயமாக அது அவர்களுடைய மனதில் ஒரு வித பதற்றத்தையும் பரீட்சை எழுதுவதில் கால தாமதத்தினையும் ஏற்படுத்தும். பல மாணவர்கள் பரீட்சைக்கு மாத்திரம் கணிப்பொறிகளை கொண்டு செல்வதற்காக தமக்கு தெரிந்த உறவினர்களிடம் முன்கூட்டியே அவர்களிடமுள்ள கணிப்பொறிகளை தருமாறு வேண்டிக் கொள்ள எண்ணம் கொண்டிருப்பர். ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் உங்களை பரீட்சையில் தேவையற்ற அச்சப்பாட்டினை தோற்றுவிக்க காரணமாக அமைந்து விடக்கூடும். Non Programmable Calculators என்பது உங்களுக்கு உயர்தர பரீட்சைக்கு மாத்திரம் அல்ல அதன் பின்னர் நீங்கள் தோற்ற இருக்கின்ற அத்தனை பரீட்சைகளுக்குமே தேவையான ஒன்றாகும். தயவு செய்து இறுதி நேரம் வரை பொடுபோக்காக இருந்துவிட்டு கைசேதபாபட்டவர்களக மாற வேண்டாம். முறையாக பயிற்சி பெற்று கணிப்பொறிகளில் உள்ள வசதிகளை பயன்படுத்துவதன் மூலம் கணித்தல் செயன்முறைக்கு செலவிடும் நேரத்தினை வெகுவாக குறைத்துக் கொள்ள முடியும். 

 எனவேதான் இப்போதே ஒரு Non Programmable Calculators இனை கொள்வனவு செய்து அல்லது அன்பளிப்பாக பெற்றுக்கொள்வதன் மூலம் உடமையாக்கிக் கொண்டு அதில் நீங்கள் போதியளவு பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலம் இலகுவாக பரீட்சைக்கு தோற்றி வெற்றி பெற முடியும். சமூக ஆர்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உங்களது பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஒரு Calculator இனை பெற்றுக்கொள்ள உதவி செய்ய முடியும். இவ்வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். 

 By: SM Saheeth Assistant Bursar South Eastern University of Sri Lanka

0 Comments:

Post a Comment