இலங்கையை நோக்கி அடுத்த ஆபத்தா?


வானிலை தரவுகளை துல்லியமாக வழங்கக்கூடிய கணணி மாதிரிகள்
தெற்கு அந்தமான் அருகே தாழ்அமுக்க பிரதேசம் உருவாகி பின்னர் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து புயாலாக மாறுகின்றதாக கடந்த ஒரு வாரமாக காட்டுகின்றது..
அதன் விளைவாக பலத்த மழை மற்றும் புயல் காற்று, மண்சரிவு அபாயம் ஏற்படும் அளவிலான ஒரு தரவினை கடந்த நாட்களாக காட்டுகின்றன.. இந்த தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. இது நாளை மாலை புயலாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.. ஆனாலும் இது இலங்கையை ஊடறுத்து செல்ல வாய்ப்பில்லை. ஆனால் சிலவேளை இலங்கையின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களால் சிலவேளை 80km வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.,.

இன்றிரவு சில இடங்களில் 200 mm வரை பலத்த மழை பெய்யலாம்... 
வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று தொடர்பில் அவதானமாக இருக்கவும்..

ஏற்கனவே இன்று காலை 8 மணி முதல் பல இடங்களில் 150mm இற்கு அதிகமான பலத்த மழை வீழ்ச்சி இலங்கையின் தென்மேற்கு பிராந்தியங்களில் பதிவாகிள்ளது. ஏற்கனவே நாட்டின் கொரோனாவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதனால் சேதத்தை குறைப்பதற்கு எச்சரிக்கையாக செயற்படவும்.. 

மேலும் வங்காளவிரிகுடாவில் கடல் மிக கொந்தளிப்பாக காணப்படும் என்பதனால், மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்..

0 Comments:

Post a Comment