எண்ணெயை மட்டும் நம்பி இனிமேல் பயன் கிடையாது!

சுற்றுலாத்துறை மீது திரும்பும் சவூதியின் கவனம்;. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க வற்வரி ஒரே நாளில் மும்மடங்கு அதிகரிப்பு

கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சவூதி அரேபியாவில் வற் வரி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மசகு எண்ணெய் தேவை மொத்தமாக சரிந்துள்ளது. இந்த சரிவு காரணமாக வளைகுடாவில் இருக்கும் எண்ணெய் வள நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் விலை மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்தச் சரிவில் இருந்து எண்ணெய் வள நாடுகள் மீண்டும் வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சவூதி அரேபியாவில் வற் வரி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த வற் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. சவூதி அரேபியா எண்ணெயை மட்டும் நம்பி இல்லாமல் மற்ற வருவாயையும் நம்பி இருக்கும் முடிவை எடுத்தது. இதனால் அங்கு தியேட்டர்கள் அனுமதிக்கப்பட்டன. அத்தோடு வற் வரியும் கொண்டு வரப்பட்டது.

இந்த வற் வரி 5மூ ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் 15மூ ஆக அங்கு வற் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 1000 ரியால் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018இல் இருந்து இந்த நிதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நிதி உதவி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.



ஜூன் 1இல் இருந்து இந்த சட்டம் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டதும், மசகு எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்ததும்தான் இதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.

அங்கு பட்ஜெட் பற்றாக்குறை இந்த காலாண்டில் 9 பில்லியன் டொலர் என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் அந்த நாடு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. ஏற்றுமதி வருவாய் 22மூ சதவீதம் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 34 பில்லியன் டொலர் ஆகும்.இது மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் சவூதியின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்கிறார்கள். இதனால் சவூதி இப்போதே தயாராகி வருகிறது. மசகு எண்ணெயை மட்டும் நம்பி இல்லாமல் மற்ற வருவாய் மீது கவனம் செலுத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத் துறை மீது கவனம் செலுத்த சவூதி முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவுகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். ஆனால் இப்போது இது அவசியமானது. நாம் ஒரு பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவை சரி செய்ய இதுதான் ஒரே வழி என்று கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment