குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் சரத் வீரபண்டாரவுக்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்பாட்டம்


மருத்துவர் சரத் வீரபண்டார அவர்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நிராகரித்து, குருநாகல் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பணியில் தொடர்ந்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனையின் பாதுகாப்பு அமைப்பு இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. 
 
இதன்போது மருத்துவமனையின் பணிப்பாளரை கடமைக்கு வரவிடாமல் தடுத்ததன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. குருநாகல் மருத்துவமனையின் பணிப்பாளருக்கு எதிராக கடந்த காலங்களில் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்துள்ளன. இதனையடுத்து மருத்துவர் சரத் வீரபண்டார கடந்த 6ஆம் திகதி சுகாதார அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் குறித்த இடமாற்றத்தை நிராகரித்துவிட்டு தொடர்ந்து குருநாகல் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை தொடர்ந்துள்ளார். இதனையடுத்தே இன்றைய தினம் அவர் மருத்துவமனைக்கு வருகைத் தரும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவாயிலை மூடியதோடு, அவரை உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர்.

0 Comments:

Post a Comment