ஹஜ் யாத்திரைக்கு உலக நாடுகளில் இருந்து செல்லும் யாத்திரிகர்களை தடைசெய்ய சவூதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


கொரோனா தொற்று பரவல் காரணமாக இம்முறை புனித ஹஜ் யாத்திரைக்கு உலக நாடுகளில் இருந்து செல்லும் யாத்திரிகர்களை தடைசெய்ய சவூதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இவ்வாண்டு புனித ஹஜ் யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாண்டு வெளிநாட்டு ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை எனினும் உள் நாட்டில் வசிக்கும் குறைந்த அளவிலான யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment