வெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு.


கல்வி அமைச்சின் சாதாரண தரத்தில் உள்ள  பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய படசாலையாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் வெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி  உள்ளடங்கப்பட்டுள்ளதாக இன்று  வெலிகம  பிரதேசத்தில் தேர்தல் காரியாலயம் திறக்கப்படும் நிகழ்வின் கலந்துகொண்ட போது  கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும  தெரிவித்தார்.

முன்னாள் வெலிகம நகரசபை தலைவர் அல் ஹாஜ் H.H Mohamed மற்றும் அஹமட் ஸப்ரி அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க பாடசாலையை தரம் உயர்த்துவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments:

Post a Comment