வெலிகம நகரசபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம மற்றும் தென் மாகாண உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மீண்டும் பதவியேற்பு
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தென் மாகாணத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி மன்றத் தலைவர்களும் மீண்டும் அப்பதவியை ஏற்கவுள்ளதாக தென் மாகாண உள் ளூராட்சி மன்ற ஆணையாளர் சேனக பல்லியகுரு தெரிவித்தார். 

 அதன்படி ஹபராதுவ பிரதேச சபைத் தலைவர் தில்சான் விதானகே, அம்பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் புஸ் பலால் மெரசிஸ், கரந்தெனிய பிரதேச சபைத் தலைவர் அமர வங்ச காமினிமுனுகொட மற்றும் வெலிகம நகரசபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம ஆகியோரே இவ்வாறு மீண்டும் தலைவர்களாக செயற்படவுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் காலப் பகுதியில் விடுமுறை வழங்கப்பட்டிருந் மேற்குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் பதில் தலைவர்களாக புரிந் தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment