பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி


பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இன்று (20) அதிகாலை கைதியான மதூஷை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

 இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்து உள்ளன.

 சம்பவத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த ஸ்தலத்தில் ரூ .22 கோடி மதிப்புள்ள 22 கிலோகிராம் போதைப்பொருள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஏறக்குறைய 18 மாதங்களாக சிஐடியின் தடுப்புக் காவலில் இருந்த மாகந்துர மதூஷ், மேலதிக விசாரணைகளுக்காக கடந்த வெள்ளிக்கிழமை (16) கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, மாகந்துர மதூஷ் அளித்த தகவல்களின்படி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் கொடிகாவத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

0 Comments:

Post a Comment