வெலிகமவில் மற்றொரு மீனவருக்கு கொரோனா
| October 25, 2020
வெலிகம நகருக்கு அருகில் வசிக்கும் மற்றொரு மீனவருக்கு கொரோனா தொற்று இருப்பது பி.சி.ஆர். பரிசோதனையின் பின் கண்டறியப்பட்டதாக
வெலிகம பொது சுகாதார அதிகாரி நாமல் நுவான் தனது பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் மாதிரிகள் அவரது மனைவி மற்றும் அவருடன் வீட்டில் வசித்த இரண்டு குழந்தைகளிடமிருந்து எடுக்கப்பட உள்ளன.
நோய் தொற்றுக்கு உள்ளான மீனவர் ஹம்பாந்தோட்டை உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளார்
அதன்படி, வெலிகமவில் கோரோணா வினால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.