பிரபல Muslim Pro எனும் App மூலம் முஸ்லிகள் தொடர்பான தகவல் திரட்டிய அமெரிக்க உளவுத்துறைMuslim Pro எனும் பிரபல செயலியினூடாக பெறப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு விற்பனை செய்துள்ளமை அம்பலமாகியது. 
 100 மில்லியனுக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் முஸ்லிகளின்

*தொழுகை நேரம், அதான், குர்ஆன், கிப்லா போன்றவற்றை* அறிய உதவும் Muslim Pro எனும் செயலியைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்க இராணுவம் பெற்று வந்த விடையம் அம்பலமாகியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பான தகவல்களை Motherboard எனும் சஞ்சிகை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

அத்தோடு இந்த செய்தியை அமெரிக்க இராணுவமும் ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

துரதிஷ்டவசமாக இந்த பிரபலமான செயலியை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் அல்ல. பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 Comments:

Post a Comment