தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மகன்:கர்நாடகாவில் கொடூரம் கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் தாயை பாலியல் வன்கொடுமை செய்து மகனே படுகொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் ஹாவே மாவட்டம் வனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரவ்வா. அவருக்கு வயது 39. அவரது மகன் சிவப்பா. அவருக்கு வயது 21. இந்தநிலையில், தாயைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக நியூஸ் மினிட் தளத்தில் வெளியான செய்தியில், இந்த விவகாரம் குறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘பாரவ்வா விவசாயக் கூலியாக இருந்துவருகிறார். அவருடைய கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துள்ளார். அவர், அதேபகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன் உறவில் இருந்துவருகிறார். 

அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், சிவப்பாவிடம் உன்னுடைய தாய் பலருடன் கள்ளக் காதலில் இருப்பதாக கூறிவந்துள்ளனர். அதனால், இந்த விவகாரம் தொடர்பாக தாய்க்கும் மகனுக்கு இடையே பலமுறை சண்டை இருந்துவந்துள்ளது. வேறு ஒருவருடன் இருக்கும் உறவை முறித்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திவந்துள்ளார். ஆனால், அதற்கு தாய் ஒப்புக்கொள்ளவில்லை. 

இந்தநிலையில், நவம்பர் 12-ம் தேதி தாய் பாரவ்வா வயல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு திரும்பிய பாரவ்வாவை மது அருந்தச் சொல்லி அவருடைய மகன் சிவப்பா கட்டாயப்படுத்தியுள்ளார். அதன்பிறகு, அவரை அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளான். அங்கே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாரவ்வா கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் சிவப்பா. 

அதன்பிறகு, எதுவும் தெரியாதது போல வீடு திரும்பிவிட்டார். கொலை செய்யப்பட்ட பாரவ்வாவின் சகோதரி அவரை தேடி அலைந்தபோது வயல்வெளியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், சிவப்பா மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, காவல்துறை நடத்திய விசாரணையில் சிவப்பா செய்த தவறை ஒப்புக்கொண்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்தல் பிரிவின் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.

0 Comments:

Post a Comment