வெலிகமவில் மொத்தம் 24 கோவிட் நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
8 ஆம் திகதி வெலிகம சுகாதார அலுவலர் பகுதியில் நடத்தப்பட்ட 330 பி.சி.ஆர் சோதனைகள் மூலம் 24 பேருக்கு கோவிட் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

இவர்களில் 18 பேர் நேற்று (09) மற்றும் 6 பேர் இன்று (10) கண்டறியப்பட்டனர், அவர்களில் 4 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர், மற்றவர்கள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைகள் மூலம் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது

இவர்கள் 4-83 வயதுக்கு உட்பட்டவர்கள்,

வெலிகம போலீஸ் பிரிவில் உள்ள

கல்பொக்க கிழக்கு, 
கல்பொக்க மேற்கு,
புதிய தெரு
 கோட்டகொட 
கோஹுனுகமுவ
ஹெட்டிவீதிய

பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

 நோய் தொற்றுக்கு உள்ளானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 அவர்களது உறவினர்களை அடையாளம்காண சுகாதாரத் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

0 Comments:

Post a Comment