தாக்குதலுக்கு உள்ளாகி பேருந்தின் கீழ் விழுந்த நபரை 'கவனிக்காத வெலிகம இரண்டு காவல்துறை அதிகாரிகள்' பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன


வெலிகம  பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் நேற்று (21) கடமையை கவனிக்காத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 வெலிகம நகரில் தாக்கப்பட்ட  ஒரு நபர்    பஸ்ஸில் மோதி மரணம் அடைந்திருந்தார்.
இது தொடர்பாக தனது கடமையை புறக்கணித்ததாக  இரண்டு போலீஸ் அதிகாரிகள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இறந்தவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இறந்தவர் அன்றிரவு வெலிகம நகரத்திற்கு உணவு எடுத்துவர வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

 தாக்குதல் நடந்த நேரத்தில் இரு கான்ஸ்டபிள்களும் சம்பவ இடத்தில் சென்றுள்ளதாகவும் , பேருந்தின் கீழ் விபத்துக்கு உள்ளாகி விழுந்திருந்த நபரை கவனிக்காது சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
 இந்த சம்பவத்தின் முழு சி.சி.டி.வி காட்சிகளையும் காவல்துறையினர் எடுத்துச் சென்றதாகவும், அதன் முதல் பகுதி நீக்கப்பட்டதாகவும், இறந்தவரின் உறவினர்கள் போலீசார் மீது
குற்றம்  சாட்டியுள்ளனர்

 இந்த சம்பவம் குறித்து சிறப்பு போலீஸ் குழு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment